ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
''இன்றைக்கு தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லை. அதனால் நல்ல பாடல்கள் எழுத வாய்ப்பும் இல்லை,'' என்கிறார் பாடலாசிரியர் சினேகன்.
சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி...
இன்றைக்கு தமிழ் சினிமாவில், பாடல்களுக்கான முக்கியத்துவம் எப்படி உள்ளது?
இன்றைக்கு சினிமாவில் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. முன்பெல்லாம் கதைகளில் பல கிளைகள் இருக்கும். அதில் மனித உறவுகள், உணர்வுகள் இருக்கும், பாடல் எழுதுவதற்கு நல்ல சூழல் இருக்கும். ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் கதைகள் இல்லை. அதனால் நல்ல பாடல்கள் எழுதும் வாய்ப்பும் இல்லை.
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், படங்கள் எடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
அப்படி சொல்லவில்லை. ஒரு சம்பவம் மட்டும் கதையாக இருப்பதால், விரிவாக சொல்லி பாடல்கள் எழுத முடியவில்லை. 10 படங்கள் வருகிறது என்றால், அதில் ஒரு படம் கதை அம்சத்துடன் வருகிறது. அதில்தான் நல்ல பாடல்களை எழுத முடிகிறது. அதனால் பெரும்பாலும் வெறும் சப்தங்களுக்கு தான் பாடல்கள் எழுதுகிறோம். அதனால் நல்ல பாடல்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
இசை அமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறதே?
சரிதான். இசை அமைப்பாளர்கள் பாடலின் மெட்டையும், சூழலையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கின்றனர். கவிஞர்கள் பாடலை எழுதி,அதே வாட்ஸ்ஆப்பில் அனுப்பி விடுகிறோம். இடையில் எந்த தொடர்பும் இல்லாமல் பாடல் உருவாகிறது. இந்த நிலை, மாற வேண்டும்.
பாடல்கள் இல்லாமல் கூட படங்கள் வருகிறதே?
பாடல்கள்தான் நம் கலாசாரத்தின் அடிநாதம். நம் வாழ்க்கை தாலாட்டில் துவங்கி, ஒப்பாரியில் முடியும். அதுதான் நம் பண்பாடு. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் உள்ளது. அதற்குள் இசையும் இருக்கிறது. பாடல் இல்லாமல் படம் எடுத்தால் அது படமாக இருக்காது. சிலர் அவ்வாறு எடுக்கின்றனர்.
இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இயக்குனர்கள் 50 பேர் இருக்கிறார்கள் என்றால், அதில் நல்ல கதையை தேடி படம் எடுக்கும் இயக்குனர்கள் ஐந்து பேர் மட்டும்தான். மீதம் உள்ள 45 இயக்குனர்கள், இரண்டு படங்களில் உதவி இயக்குனர்களாக இருந்து விட்டு, படம் எடுக்க வந்து விடுகின்றனர். அதனால் வெற்றிப்படங்களை கொடுக்க முடியவில்லை. இன்றைய தமிழ் சினிமா, சப்தங்களுக்குள் சிக்கிக்கிடக்கிறது. அதை ரசிகர்கள்தான் மீட்க வேண்டும்.