சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள்.... எங்கே செல்லும் இந்த பாதை! | குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் |
நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ள படம் தக் லைப். இப்படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற வேடத்தில் கமல் நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யா நாடு மற்றும் அங்குள்ள நகரங்களில் நடைபெற உள்ளது. அங்கு கமல் நடிக்கும் அதிரடியான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.
இதற்கிடையே கமல்ஹாசன் அமெரிக்கா பறந்துள்ளார். தக்லைப் மற்றும் இந்தியன் 2 பட வேலைகள் தொடர்பாக அவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்தபடியே அவர் ரஷ்யா செல்ல உள்ளாராம்.