ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'லால் சலாம்'.
இப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் 'திமிறி எழுடா' என்ற பாடல் 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த பாடகர்களான ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரது குரலை 'ஏஐ' மூலம் உருவாக்கி அப்பாடலை அமைத்திருந்தார் ஏஆர் ரகுமான்.
அது குறித்து பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்கள். டெக்னாலஜி மூலம் மறைந்தவர்களது குரலையும், உருவத்தையும் பயன்படுத்துவது சரியல்ல என்றும் சொன்னார்கள்.
இதற்கு ஏஆர் ரகுமான், “அவர்களது குடும்பத்தினரிடம் இதற்காக அனுமதி பெற்றோம். மேலும், நல்லதொரு சம்பளமும் அதற்காக அளிக்கப்பட்டுள்ளது. டெக்னாலஜி என்பதை சரியாகப் பயன்படுத்தினால் அது ஆபத்தல்ல, தொல்லையும் அல்ல…,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




