சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
2024ம் ஆண்டு ஆரம்பமானதும் தெரியவில்லை, முடியப் போவதும் தெரியவில்லை, அந்த அளவிற்கு வேகமாகக் கடந்துவிட்ட ஒரு உணர்வு. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தவிர மற்ற மூன்று வெள்ளிக்கிழமைகளிலும் புதிய படங்கள் வெளியாகின.
இந்த வார வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 2ம் தேதியில் வெளியாக உள்ளதாக 4 படங்களின் அறிவிப்புகள் இதுவரையில் வந்துள்ளன. “வடக்குபட்டி ராமசாமி, டெவில், மறக்குமா நெஞ்சம், சிக்லெட்ஸ்ட்” ஆகிய படங்கள்தான் அவை.
'டிக்கிலோனா' படத்திற்குப் பிறகு சந்தானம், இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் இணைந்துள்ள படம். இப்படத்தின் டிரைலர் வெளியான பின் சர்ச்சையானது. ஆனால், படத்தில் காமெடியை மட்டுமே சொல்லியிருக்கிறோம், வேறு எந்த அரசியலும் கிடையாது என்று தெரிவித்துவிட்டார் சந்தானம். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
'டெவில்' படம் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை அவரது தம்பி ஆதித்யா இயக்கி உள்ளார். இதற்கு முன்பு ராம், மிஷ்கின், பூர்ணா நடித்த 'சவரக்கத்தி' படத்தை இயக்கியவர். 'டெவில்' படத்தில் விதார்த், த்ரிகுன், பூர்ணா, சுபஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
'மறக்குமா நெஞ்சம்' படத்தில் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். துனா, மலினா, ராகுல் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பள்ளி காலத்து காதல் கதை என்பது டிரைலரைப் பார்த்ததும் தெரிகிறது. இந்த பள்ளி காலத்து காதல் கதைகளுக்கு யாராவது தடை வாங்கினால் நல்லது.
முத்து இயக்கத்தில், சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரசீம், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹல்தார் நடித்துள்ள படம் 'சிக்லெட்ஸ்'. 2கே கிட்ஸ்-களின் காமப் படம் என்பது படத்தின் டிரைலரில் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்குமோ, 'ஏ' சான்றிதழ்தான் கிடைத்திருக்கும். கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய படம், தாமதமாக வெளியாகிறது.