அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வருகிறார் அஜித்குமார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு நடுவே இன்னொரு பக்கம் இறுதி கட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன்-2 படமும் ஏப்ரலில் திரைக்கு வருவதால் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொள்ளும் என்று தெரிகிறது.