அனைத்து தடைகளும் நீங்கி வெளியானது கங்குவா : ரசிகர்கள் உற்சாகம் | பிக்பாஸ் வருவதற்கு டாக்டரிடம் பரிந்துரை செய்தேன்- அன்ஷிதா | புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? |
2022ம் ஆண்டில் வெளியான படம் 'கட்டா குஸ்தி'. இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தனர். செல்ல அய்யாவு இயக்கி இருந்தார், இதில் குஸ்தி விளையாட்டில் சாதிக்க விரும்பும் ஒரு பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் இடையிலான பிரச்னையாக காமெடியாக சொன்ன படம்.
தற்போது இந்த படத்தின் டீம் மீண்டும் இணைகிறது. விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், புதிய படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது தயாரிப்பாக உருவாகிறது.
இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறும்போது “மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்றார்.
விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும். முன்னதாக ‛கட்டா குஸ்தி' படத்திற்கு முன் இவர்கள் கூட்டணியில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் வெளியாகி இருந்தது.