புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி |

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், நானி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் பிரபல இயக்குனர் ராஜமவுலியின் டைரக்சனின் நடித்து விட்டனர். ஆனால் உச்சத்தில் இருக்கும் நடிகர் மகேஷ்பாபு இதுவரை ராஜமவுலி டைரக்சனின் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார் என்பது கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது.
தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டதாக ராஜமவுலியின் தந்தையும் அவரது படங்களின் கதை இலாக்காவில் முக்கிய பங்கு வகிப்பவருமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார் இந்த படத்தின் சில தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வதற்காக நடிகர் மகேஷ்பாபு தற்போது தனியாக சென்று ஜெர்மனிக்கு பயணம் கிளம்பி சென்றுள்ளதும் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.




