சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை | 'சூது கவ்வும் 2' : ஹரிஷா ஜஸ்டின் முதல் படம் 13ம் தேதி வெளியாகிறது |
'மார்க் ஆண்டனி'யின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து அஜித்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அஜித்தை சந்தித்து ஆதிக் ரவிச்சந்திரன் கதை சொன்னதும், அந்த கதைக்கு அஜித் ஓகே சொன்னது வரைக்கும் உண்மைதான் என்றார்கள். ஆனால் இதற்கான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றனர்.
இந்த நிலையில் அஜித்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான பூஜை ஐதராபாத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் எளிமையாக நடந்துள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர்.