இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான அமீர்கானின் மகள் ஈராகான், நூபுர ஷிகாரே ஆகியோருக்கு கடந்த ஜனவரி 3ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் அவர்களது குடும்பத்தார் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அதோடு, ஈராகானை திருமணம் செய்து கொண்ட நூபுர், உடற்பயிற்சி ஆசிரியர் என்பதால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு அதே முண்டா பணியன், அரைக்கால் டவுசரோடு திருமணத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அமீர்கான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது பாலிவுட் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் சூர்யாவும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். கருப்பு நிற ஆடை அணிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.