ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
இன்றைக்கு இருக்கிற முன்னணி ஹீரோயின்கள் பெரும்பாலும் சோலோ ஹீரோயினாக நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதை உணர்ந்து கொண்ட புதிய இயக்குனர்கள் அதற்கேற்ப கதை சொல்லி ஓகே வாங்கி விடுகிறார்கள். அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஓகே சொல்லி உள்ள படம் 'சிஸ்டர்'. அறிமுக இயக்குனர் ரா.சவரிமுத்து இயக்குகிறார்.
இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி நடிக்கிறார்கள். துவாரகா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிளேஸ் கண்ணன், ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கிறார்கள், இமான் இசை அமைக்கிறார், தமிழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் காமெடி த்ரில்லர் படம்.