விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் |
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 150 படங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் அரவிந்த். பல படங்களை இயக்கியும் உள்ளார், கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர். தற்போது அவர் எழுத்தாளராக மாறி உள்ளார். அவர் கன்னடத்தில் எழுதியுள்ள 'ப்ரிதியிந்த ரமேஷ்' என்ற தன்னம்பிக்கை புத்தகம் 'அன்புடன் ரமேஷ்' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகி உள்ளது. கே.நல்லதம்பி இதை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறும்போது "ஒருவர் வாழ்க்கையிலும் தொழில் அல்லது பணியிலும் வெற்றி பெற்று செல்வந்தராக உயர 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் சில மாற்றங்களை செயல்படுத்தி, வியூகங்கள் வகுத்து அதற்கு ஏற்ப உழைத்தால் 6 முதல் 8 ஆண்டுகளிலேயே இலக்குகளை அடைந்து விடலாம். இந்த மாற்றங்கள், வியூகங்கள் மற்றும் உழைப்பு குறித்தும், நேர்வழியில் விரைவில் வெற்றி பெறுவதற்கான சூட்சமங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன்.
நம்முடன் பணியாற்றுபவர்களையும் நமது குடும்பத்தினரையும் நமது சிறு செயல்கள் மூலமே உற்சாகப்படுத்தி விடலாம். இதன் மூலம் நமது பணியிடத்திலும், வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது குறித்தும் எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எடுத்துரைத்துள்ளேன்“ என்கிறார்.