லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என அறிவிக்கப்பட்ட படங்களாக 'லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் 1, அரண்மனை 4' ஆகிய படங்கள் இருந்தன. இவற்றில் 'அயலான், மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்களின் டிரைலர் நேற்று வெளியானது. இன்று 'கேப்டன் மில்லர்' டிரைலர் வெளியாக உள்ளது.
ஆனால், 'லால் சலாம்' படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. பொங்கலுக்கு படம் வெளியாகாது என செய்திகள் வெளியானது. ஆனால், படக்குழு அது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறார்கள். அடுத்த வெளியீட்டுத் தேதி எப்போது என்று அப்டேட் கொடுக்கலாமே என ரஜினி ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'அரண்மனை 4' படத்தின் அப்டேட்டை எப்போதோ நிறுத்திவிட்டதால் அது பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.
பொங்கல் வெளியீடுகள் அடுத்த வாரம் 12ம் தேதி என அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் 'லால் சலாம்' குறித்த புதிய தேதி அறிவிப்பு இன்று ஏஆர் ரகுமானின் பிறந்தநாளிலாவது வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.