ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர். இவரின் 'பவளக்கொடி, ஹரிதாஸ்' போன்ற படங்கள் எல்லாம் ஆண்டு கணக்கில் தியேட்டர்களில் ஓடின. 1959ல் மறைந்த இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில் தற்போது இன்னொரு மகளான சுசீலாவும்(89) காலமானார். சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த சுசீலா வயதுமூப்பால் வரும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் மறைந்தார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.