குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் மூன்றாவது படம் அனிமல். ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த அனிமல் படம் ஹிந்தியில் தயாரான போதும், தமிழ், தெலுங்கிலும் வெளியானது. மேலும் இப்படம் திரைக்கு வந்தபோது பாலியல் அத்துமீறல், ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனை அப்படத்தில் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும் இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அனிமல் படம் 800 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது.
இந்த நிலையில் அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும், இரண்டாம் பாகத்திற்கு அனிமல் பார்க் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.