கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் மன்சூர். இதை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான்.
இந்த விவகாரத்தில் த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென கூறிய நீதிபதி எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? என மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபாராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். மேலும் அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.