ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

கடந்த 2019ல் தெலுங்கில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் யாத்ரா. மறைந்த ஆந்திர முதல்வர் ஒய். ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை, குறிப்பாக அவர் ஆட்சியை பிடிப்பதற்காக நடத்திய பாதயாத்திரையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இதில் ராஜசேகர் ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். இந்த படத்தை மகி ராகவ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றதுடன் ஆந்திர அரசியலில் கொஞ்சம் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' என்கிற பெயரில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதை முழுவதுமே ராஜசேகர் ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார்..
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜீவா, “அவர்கள் அது அவரது முடிவு என்றே நினைத்தார்கள்.. ஆனால் அவருக்கு தெரியும் இது வெறும் தொடக்கம் தான் என்று.. ஜெகன்மோகன் ரெட்டி காருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எங்கள் லென்ஸ் வழியாக உங்களது கதையை சொல்ல நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்த படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த மம்முட்டியும் இந்த படத்தில் இருக்கிறார் என்றாலும் அவரது போர்சன் குறைவுதான் என்று சொல்லப்படுகிறது.




