பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் | டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? |
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்து, இயக்கிய படம் 'மாயவன்'. 2017ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். தற்போது இதன் இரண்டாம் பாகம் 'மாயா ஒன்' என்ற பெயரில் உருவாகிறது. இதனையும் சி.வி.குமாரே இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சந்தீப் கிஷன் நாயகனாக தொடர, 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஆகன்ஷா ரஞ்சன் கபூர் நாயகியாக நடிக்கிறார். ஆகன்ஷா 'கில்தி' என்ற படத்தில் அறிமுகமாகி 'மோனிகா ஓ மை டார்லிங்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ரே' என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.