ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கேஜிஎப் 1, கேஜிஎப் 2 என இரண்டு பாகப் படங்களின் மூலம் கன்னட சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள படம் 'சலார்'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
காட்சியமைப்புகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பார்க்கும் போது மீண்டும் 'கேஜிஎப்' சாயலுடன் ஒரு படம் என்றுதான் தோன்றுகிறது. 'கேஜிஎப்' படத்தில் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்திருந்தார்கள். இந்த 'சலார்' படத்தில் 'கான்சார்' என்ற சாம்ராஜ்ஜியத்தை மையமாக வைத்துள்ளார்கள்.
பிரபாஸ், பிருத்விராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அந்த கான்சார் சாம்ராஜ்ஜியத்தில் தன் மகன் பிருத்விராஜை ஒரு 'துரை' ஆகப் பார்க்க வேண்டும் என்பது அவரது அப்பா ஜெகபதிபாபுவின் ஆசையாக உள்ளது. அந்த சாம்ராஜ்ஜியத்தைப் பிடிக்க ரஷியர்கள், செர்பியர்கள் படையுடன் வருகிறார்கள். அவர்களை எதிர்க்க தனது படையாக ஒரே ஒரு ஆளான நண்பன் 'தேவா' பிரபாஸை அழைக்கிறார் பிருத்விராஜ். அவர்களை எதிர்த்து பிரபாஸ் சண்டையிடுகிறார். இதுதான் இந்த முதல் பாகத்தின் டிரைலர் ஆக இருக்கிறது.
டிரைலரில் பிரபாஸ்,. பிருத்விராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார்கள். படத்திலும் அவர்களே பேசுவார்களா என்பது படம் வந்த பின்தான் தெரியும்.
'தேவா' என பிருத்விராஜ் சொல்லும் போது 'தளபதி' படத்தின் தேவா, சூர்யா ஞாபகம் வந்து போகிறது. ஒருவேளை 2023ன் 'தளபதி' படமாகக் கூட இந்த 'சலார்' இருக்கலாம்.
டிரைலரிலேயே அவ்வளவு அதிரடியான ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் உள்ளன. படத்தில் அது இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைலரில் நாயகி ஸ்ருதிஹாசன் சில வினாடிகள் வந்து போகிறார். ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஸ்ரேயா ரெட்டி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை அனைத்துமே 'கேஜிஎப்' படத்தை பிரதி எடுத்தது போல உள்ளது. அதில் இருந்த எமோஷன் இதிலும் இருந்தால் இந்தப் படமும் வசூலில் சாதனை படைக்கலாம்.