பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
துருவ் விக்ரம் நடித்த ‛ஆதித்ய வர்மா' படத்தில் நாயகியாக நடித்தவர் பனிதா சந்து. அதன்பின் பிறமொழிகளில் நடித்தவர் இப்போது தெலுங்கில் அதிவி சேஷ் நாயகனாக நடிக்கும். 'G2 '( குடாச்சாரி 2) படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.
பனிதா சந்து கூறுகையில், '' இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும்,'' என்றார்.