முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் | கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி |
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு ‛ஜப்பான்' படம் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடிக்கிறார். அதோடு 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் தனது 27வது படத்திலும் நடிக்கிறார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த வாரத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் தொடங்கியது .
இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாதாம். இதில் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரை சுற்றி நடைபெறும் குடும்ப கதை தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கைதி படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் அல்லாமல் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.