ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் | சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கலையரசனின் மகள்! | 'டாக்சிக்' படத்தில் ரெபேக்கா ஆக தாரா சுட்டாரியா! | விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம் 2' படம் நிறுத்தி வைப்பு! : தயாரிப்பாளர் தகவல் |

2023ம் ஆண்டின் கடைசி சில வாரங்களுக்கு வந்துவிட்டோம். எஞ்சியுள்ள அடுத்த ஆறு வாரங்களில் டாப் நடிகர்களின் படங்கள் எதுவும் தமிழ் சினிமாவில் வெளியாகவில்லை. இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள்தான் வெளியாக உள்ளன. அந்தப் படங்களின் வசூலைப் பற்றியெல்லாம் யாரும் அவ்வளவு பரபரப்பாகப் பேச மாட்டார்கள். படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி மட்டும்தான் பேசுவார்கள்.
அடுத்து வசூலைப் பற்றி பரபரப்பாகப் பேச வேண்டிய படமென்றால் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ள 'சலார்' படத்தைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். அப்படத்திற்கான வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தின் கதாநாயகன் பிரபாஸின் முந்தைய படங்களின் வியாபாரம், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வந்த 'கேஜிஎப் 2' வியாபாரம் ஆகியவற்றை விடவும் 'சலார்' வியாபாரம் அதிகமாக நடைபெற்று வருகிறதாம்.
டிசம்பர் 1ம் தேதி இப்படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார்கள். அதற்குக் கிடைக்கும் வரவேற்பை வைத்தே படத்திற்கும் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்பதை யூகிக்கலாம். இந்த ஆண்டில் ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'பதான், ஜவான்' படங்கள் தலா 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக இந்திய சினிமாவில் இருந்தன. அந்த வசூலை 'சலார்' முறியடிக்குமா என்பதுதான் படம் வெளியாகும் போது எழக் கூடிய கேள்வியாக இருக்கும்.




