காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
‛லெஜண்ட்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சரவணன். சென்னையில் வணிகர் சங்கம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‛‛எந்த நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் காக்கா, கழுகு கதைகள், பட்டம் போன்றவற்றால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயரலாம். நாம் உயர்ந்தால் நாடும் உயரும்,'' என்றார்.
கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து சமூகவலைதளங்களில் ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வந்தனர். இதுதொடர்பாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய காக்கா, கழுகு கதையும், அதற்கு லியோ பட சக்சஸ் மீட்டில் விஜய் தந்த பதில் கதையும் பேசு பொருளானது. இதுகுறித்து தான் சரவணன் இப்படி மறைமுகமாக பேசி உள்ளார்.