''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறவர் டேனியல் அனி போப். விஜய்சேதுபதியுடன் 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு யாமிருக்க பயமே, மாசு என்கிற மாசிலாமணி, ரங்கூன், ஜருகண்டி, ஜாங்கோ, மாநாடு, ரெய்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
டேனியலிடம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடகைக்கு வீடு தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்துள்ளது. பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனத்தின் மீது டேனியல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:
“இணைய தளத்தில் வாடகைக்கு வீடு தேடினேன். அப்போது ஒரு நிறுவனம் தங்களிடம் 17 லட்சம் கட்டினால் வீடு பார்த்து தருவதாக தெரிவித்தது. மாதா மாதம் தாங்களே வாடகையை செலுத்தி விடுவதாகவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதலீட்டு தொகையை திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்தனர். அதை நம்பி 17 லட்சம் கொடுத்து போரூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றேன். அந்த வீட்டில் குடியேறிய 3 மாதங்களுக்கு பிறகு வீட்டு உரிமையாளர் வந்து வாடகை தரவில்லை என்று சொல்லி வீட்டை காலிசெய்யும்படி கூறினார். அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பெங்களூரை சேர்ந்த அந்த நிறுவனம் இப்படி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்'' என்று வீடியோவில் பேசியுள்ளார்.