அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

'காதலாகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு யுத்தம் செய், மேக்னா, எனக்குள் ஒருவன், கத்துகுட்டி, நவரச திலகம், தர்மதுரை, அச்சமின்றி, பொட்டு, சக்ரா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம் 'கட்டில்'. இதனை கணேஷ் பாபு இயக்கி, நடித்துள்ளார். 3 தலைமுறைகளாக ஒரு வீட்டில் தொடர்ந்து பாதுகாக்கப்படும் ஒரு கட்டிலை மையமாக கொண்ட கதை. இதனை எடிட்டர் பி.லெனின் எழுதியுள்ளார்.
இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே கணேஷ் பாபு ஜோடியாகவும், கர்ப்பிணி பெண்ணாகவும் நடித்திருக்கிறார். இது குறித்து அவர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது “இந்த படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கவேண்டும் என்றார்கள். முதலில் எனக்குப் பிடிக்கவில்லை, பப்ளி கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இந்தக்கேரக்டரில் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். இயக்குனர் கணேஷ் கதை சொன்ன போது இந்த கதாபாத்திரத்தின் கனம் புரிந்தது. தனலட்சுமி கேரக்டர் மிக வலுவானதாக இருந்தது. எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என்றார்.
விழாவில் இயக்குனர் கணேஷ் பாபு பேசும்போது “எடிட்டர் லெனின் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பு செய்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்தக்கதை. ஶ்ரீகாந்த் தேவாவின் 101வது படம் இது. அவருக்கு என் குறும்படம் மூலம் தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. சிருஷ்டி டாங்கே அர்ப்பணிப்பு உள்ள ஒரு ஹீரோயின். இந்தப்படத்தில் மிகச் சிறப்பான ஒரு கதாப்பாத்திரம் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கையில் ஏறுமுகம் தான்” என்றார்.