இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு புகைப்படத்தில் அல்லது வீடியோவில் இருக்கும் ஒருவரது முகத்தை இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் சோசியல் மீடியாவில் பலரும் போலியான வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். இப்படித்தான் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஷாரா படேல் என்பவரின் முகத்தில் இணைத்து டீப் பேக் வீடியோ வெளியிட்டிருந்தார்கள்.
இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசும் அதை தடுப்பதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்படியான நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்பின் டீப் பேக் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும் இதுகுறித்து புகார் அளிக்குமாறு கேத்ரினா கைப்பை வலியுறுத்தி வருகிறார்கள்.