'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லியோ வெற்றி விழாவில் இதனை விஜய் சூசகமாக தெரிவித்து விட்டார். இதனால் இதுகுறித்து திரைப்பட நட்சத்திரங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: சினிமா நல்ல விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது, கெட்ட விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. நிறைய நல்ல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணமாக, 'ஜெய்பீம்' படத்தால் பழங்குடி மக்களுக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. விஜய் அரசியலுக்கு வருதற்கான வேலைகளைச் செய்து வருகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாருக்கும் அரசியலுக்கு வருதற்கான உரிமையிருக்கிறது. ஆனால், அதற்கு முன் அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு அரசியலுக்கு வரவேண்டும். விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்தபிறகு அரசியலுக்கு வரவேண்டும். என்றார்.