ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'ஜப்பான்'. இது கார்த்தியின் 25வது படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. 2.19 நிமிடம் ஓடும் டிரைலரில், கார்த்தியே முழுவதும் வசனங்களாக பேசுகிறார். அதில் திமிங்கலம் கதையை கூறி தன்னுடைய கதாபாத்திரத்தை விளக்குகிறார்.
அம்மாவுக்காக குட்டி மீன், சின்ன சின்ன திருட்டை பண்ண ஆரம்பித்தது என்றும் பெருசாகி திமிங்கலம் ஆகிய அந்த மீனை பிடிக்க சுறா, கொடுவா என மத்த மீன்கள் எல்லாம் சுத்துப் போட திமிங்கலம் பிடிபட்டதா? இல்லையா? என்பதை விவரிக்கும் வகையில் படத்தின் டிரைலர் இடம் பெற்றது. டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படமும் அதே நாளில் வெளியாவதால் எந்த படம் ஹிட்டாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.