அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
சினிமா என்பது அனைவருக்குமானது. ஆனால், அதை சில முன்னணி நடிகர்கள் அவர்களுக்கானது என்று மட்டுமே நினைத்து செயல்பட்டு வருவதால் தமிழ் சினிமாவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக திரையுலகில் வருத்தப்படுகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளிவந்த படம் 'லியோ'. இப்படத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய தியேட்டர்களிலும் வெளியிட்டார்கள். ஒரு சில தியேட்டர்களில் மட்டும் ஒப்பந்தப் பிரச்சனையால் வெளியாகவில்லை. மற்ற தியேட்டர்களில் ஏற்கெனவே வெளியான வேறு சில படங்கள் வெளியாகின.
'லியோ' படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இரண்டாம், மூன்றாம் நிலை நடிகர்களின் படங்கள் கூட வெளியாகவில்லை. வெளியான ஒரு வாரத்திற்குப் பின்பு நேற்று அறிமுக நடிகரின் படம் மட்டும் வெளியானது. அடுத்த வாரம் கூட மிகச் சிறிய பட்ஜெட் படங்கள் ஒரு சில மட்டுமே வெளியாகின்றன.
'லியோ' படத்தின் வெளியீடு காரணமாக மற்ற படங்களை வெளியிட முடியாத சூழலைப் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கமோ, தியேட்டர்காரர்கள் சங்கமோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் ஒரே நாளில் ஐந்தாறு முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளியாகியுள்ளன. ஆனால், இப்போது அப்படி யாரும் வெளியிட முன் வருவதில்லை.
2024ம் ஆண்டில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளது. அதனால், நடுத்தர பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் ஆகியவற்றின் வெளியீடுகள் மிகவும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதற்கு ஏதாவது வழி செய்தால்தான் சிறிய படங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.