இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் அரபு நாடுகளில் நடக்கிறது. அஜித் முன்பு சென்னை, திருவான்மியூரில் குடியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.
இந்நிலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் சாலை விரிவாக்க மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக அந்தபகுதிகளில் வசிக்கும் பலரது வீடுகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்தின் வீட்டு சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.