ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழில் ராதா மோகன் இயக்கிய அழகிய தீயே என்கிற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2010ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு 'ஒருத்தி' என்கிற படத்தின் மூலம் நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நவ்யா நாயர்.
கேரளாவில் சுங்கத்துறையில் இணை ஆணையராக இருந்த சச்சின் சாவந்த் என்பவர் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கினார். விசாரணையில் இவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் இடையே நட்பு இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக நவ்யா நாயருக்கு சச்சின் சாவந்த் பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இது குறித்து மறுக்காத நவ்யா நாயர் தங்களிடம் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்றும், நட்பு ரீதியாக சில பரிசு பொருட்கள் கொடுத்துள்ளார்.. அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் இப்படி அமலாக்கத்துறை விசாரணை வரை நவ்யா நாயரின் பெயர் அடிபட்டதால் கணவன் - மனைவி இருவருக்கும் இதன் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிய இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவின. இதற்கு, நவ்யா நாயர் தனது கணவர், மகன் மற்றும் மாமியாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.