அக்டோபர் 25ல் வெளிவரும் 'வெனம்' கடைசி பாகம் | பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம் | தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம் | விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் | பாலியல் குற்றச்சாட்டில் பிரித்விராஜ் உதவி இயக்குநர் சரண்டர் | ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம் | தயாரிப்பாளர் சங்க தலைமையை மாற்ற வேண்டும் : பெண் தயாரிப்பாளர் போர்க்கொடி | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' 2025க்கு தள்ளி போகிறதா? |
சின்னத்திரை நடிகையான காயத்ரி, நடன கலைஞர் யுவராஜை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் பல வருடங்கள் கழித்து 2வது முறை கர்ப்பமாகியிருக்கிறார் காயத்ரி. பிரசவ காலம் நெருங்கிவிட்டதால் அண்மையில் அவர் நடித்து வந்த மீனாட்சி பொண்ணுங்க உள்ளிட்ட சில சீரியல்களில் இருந்து விலகினார். இந்நிலையில் காயத்ரியின் சீமந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்கள் உட்பட பலரும் காயத்ரிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.