ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி 'ஜவான்' படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் சத்தமே இல்லாமல் ஒரு தமிழ் பெண் இயக்குனர் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அந்த படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி உள்ளது. அந்த பெண் இயக்குனர் பெயர் கலையரசி சாந்தப்பன். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உறவினர்.
சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்த அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அங்கு திரைப்படம் தொடர்பான கிராபிக்ஸ் பணிகளை செய்து வருகிறார். ஏராளமான குறும்படங்கள், விளம்பர படங்களை இயக்கியுள்ள கலையரசி முதன் முதலாக பாலிவுட் படத்தை இயக்கி உள்ளார். 'மிஸ்ட்ரி ஆப் டாட்டூ' என்பது படத்தின் டைட்டில். இதில் அர்ஜூன் ராம்பால், அமிஷா படேல், டைய்சி ஷா, டாம் ஹென்றி என பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ரோஹித் ராஜ் கதை நாயகனாக நடித்திருக்கிறார். மகிழன் சந்தோஷ் இசை அமைத்திருக்கிறார்.
இதுகுறித்து கலையரசி சாந்தப்பன் கூறும்போது, “நான் பக்கா தமிழ் பெண். சென்னைதான் நான் பிறந்த ஊர். தரமணி இன்ஸ்டிடியூட்டில் டைரக்ஷன் கோர்ஸ் படித்து விட்டு குடும்பத்தோடு லண்டனில் செட்டிலாகிவிட்டேன். ஏற்கெனவே இரண்டு தமிழ் படங்களை தயாரித்திருக்கிறேன். நானே தமிழ் படம் இயக்க வேண்டும் என்று நினைத்த போது இந்தி படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்தார். அதனால் இந்தி படத்தை இயக்கி உள்ளேன். இந்த படத்தின் கதையை நம்பித்தான் முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். கொரோனா காலத்தில் லண்டனில் படப்பிடிப்பு நடத்தினோம். மிகுந்த சிரமத்திற்கு இடையில் படத்தை முடித்தோம். இந்தியில் நன்றாக படம் போகிறது. தமிழில் ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருப்பதால் இங்கு வெளியாகவில்லை. அடுத்து தமிழ் படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறேன். என்றார்.