இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
அவதூறு வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜாவின் கணவரான இவர், தற்போது பெப்சி அமைப்பின் தலைவராக உள்ளார். கடந்த 2016ல் ஒரு பேட்டியில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போரா குறித்து சில அவதூறு கருத்துகளை செல்வமணி கூறினார். இதனால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார் முகுந்த் சந்த் போரா. இவர் மறைவுக்கு பின் இவரது மகன் இந்த வழக்கை நடத்தி வந்தார்.
இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு இன்று(ஆ., 28) விசாரணைக்கு வந்தபோது செல்வமணி தரப்பில் அவரோ, அவர் சார்பில் வக்கீலோ யாரும் ஆஜராகவில்லை. இதனால் செல்வணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.