அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது டிரைலரும் விரைவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் இந்த படத்தின் புரமோஷனை நடத்த திட்டமிட்டுள்ள இயக்குனர் அட்லி, விரைவில் சென்னையிலும் நடத்தப்போகிறார்.
இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் ஷாருக்கான் உட்பட இப்படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக, ஜவான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் போது நடிகர் விஜய்யும் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருப்பதாக தகவல் கசிந்து கொண்டிருக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.