ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல சின்னத்திரை நடிகையான வைஷாலி தனிகா விபத்து ஒன்றில் சிக்கி உயிர் பிழைத்து வந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முகமாக வலம் வரும் வைஷாலி தனிகா ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளார். அண்மையில், வைஷாலி தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் பயணித்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் வளைவில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், 'காரில் சீட் பெல்ட் போட்டிருந்ததால் தப்பித்தேன். இல்லையேல் பெரும் விபத்தாக மாறியிருக்கும். காரில் சீட் பெல்ட் போடுவதில் எனக்கு முதல் உடன்பாடு கிடையாது. ஆனால், இப்போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே, கட்டாயம் அனைவரும் சீட் பெல்ட் போடுங்கள். பைபாஸில், வளைவுகளில் கவனமாக செல்லுங்கள்' என தனக்கு கழுத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்தை காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.