50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
தமிழ் சினிமா உலகில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வந்தால் மட்டுமே மக்கள் தியேட்டர்களுக்கு வருகிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்திற்கான வரவேற்பு முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே அதிகமாக உள்ளது.
இப்படத்தின் வசூல் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிறப்பாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வெளிநாடுகளில் முதல் நாள் வசூலாக 33 கோடியை வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்ட ஐங்கரன் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வார இறுதிக்குள் அனைத்துவித சாதனைகளையும் முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் நேற்று இரவுடன் முடிவடைந்த வசூலில் 2.25 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி வசூலித்துள்ளதாம். இன்று சனி மற்றும் நாளை ஞாயிறும் அதிகக் காட்சிகளில் படம் திரையிடப்பட உள்ளது என்று அங்கு படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.