16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது இப்படத்தில் திரிஷா, தமன்னா ஆகிய இருவருமே நடிப்பதாக கூறுகிறார்கள். மேலும் இதில் அர்ஜுன், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். அந்த வகையில் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து மங்காத்தா படத்தில் நடித்த அர்ஜுன், திரிஷா ஆகிய இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைய இருக்கிறார்கள்.