அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சலார் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் அம்மா - மகன் சென்ட்டிமென்ட் கதையில் உருவாகி இருப்பதாகவும், அம்மாவுக்காக எதையும் செய்யக்கூடிய மகனாக நடிக்கும் பிரபாஸ், தாய்க்கு கொடுத்த வாக்குறுதிக்கும், தனது நண்பனின் விசுவாசத்திற்கும் இடையில் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இருக்காதாம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் நண்பனாக நடித்துள்ள மலையாள நடிகர் பிருத்விராஜ், பிரபாஸின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த சலார் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது.