பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் கேப்டன் மில்லர். சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் இந்த வருடத்தில் வெளியாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 28ல் வெளியாகும் என அறிவித்தனர். இப்போது அன்றைய தினம் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 மணி நேரத்தில் கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் தனுஷின் ஆக்ரோஷமான போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.