2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பீக்காக் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் வி.ரி.சுபாகரன் தயாரிக்கும் படம் 'சமரா'. மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்த படத்தில் ரகுமான், பரத், விவேக் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீலா லக்ஷ்மி, சினு சித்தார்த், சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார், தீபக்வாரியர் பாடல்களுக்கு இசை அமைக்கிறார், கோபி சுந்தர் பின்னணி இசை அமைக்கிறார்.
படத்தை சார்லஸ் ஜோசப் இயக்குகிறார் படம் பற்றி அவர் கூறும்போது, “பேமிலி செண்டிமெண்ட்டுடன் அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரகுமான், பரத் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.