‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி | பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவரகொன்டா மீது வழக்கு பதிவு | ஐபிஎல் சீசன் : இரண்டு மாதங்களுக்கு தியேட்டர்களுக்கு சிக்கல் | 'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் |
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தசரா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நானிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .