2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மிர்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சற்றே முதிர்ந்த தோற்றத்தில் ஜெயிலர் வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆக., 10ல் படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‛காவாலா' என்ற பாடலை வெளியிட்டனர். அதில் தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது வரை அந்த பாடலை 45 மில்லியனுக்கும் அதிகமான பேர் யு-டியூப்பில் பார்வையிட்டுள்ளனர். இப்போது அடுத்தப்படியாக ஹூக்கும் என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். பாடல் வரிகளை சூப்பர் சுப்பு என்பவர் எழுத, அனிருத் இசையமைத்து பாடி உள்ளார். ரஜினியின் மாஸை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடல் வெளியான 15 நிமிடத்திலேயே 2.15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் யுடியூப்பில் கிடைத்தன.