தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி சார்பில் வாராஹி என்ற யாத்திரையை தொடங்கினார். அப்போது அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் ஆந்திரா அமைச்சரும், நடிகையுமான ரோஜா, நடிகர் பவன் கல்யாணை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
அவர் கூறுகையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பவன் கல்யாண் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி அவர் கற்றுக் கொடுத்தால் அது சன்னி லியோன் வேதம் ஓதியது போல் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். அமைச்சர் ரோஜாவின் இந்த கருத்துக்கு பவர் கல்யாண் ரசிகர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் சன்னி லியோனும் ரோஜாவுக்கு சோசியல் மீடியாவில் ஒரு பதிலடி கொடுத்து அதை அவருக்கு டேக் செய்திருக்கிறார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒரு ஆபாச பட நடிகை தான். ஆனபோதிலும் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைப் போல் அல்லாமல் நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாசமாக நடிப்பதை விட்டு வெளியேறி விட்டேன். ஆனால் நீங்கள் அந்த உலகத்திற்குள் தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள்'' என்று ரோஜாவுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் சன்னி லியோன். அவரது இந்த கருத்து ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.