புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
டைரி பட இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக ராகவா லாரன்ஸ்-ன் தம்பி எல்வின் லாரன்ஸ் அறிமுகமாகிறார் . இதில் அவருக்கு ஜோடியாக வைஷாலி ராஜ் நடிக்கிறார். 5 ஸ்டார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‛புல்லட்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கூடுதலாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் லாரன்ஸ் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.