நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு வெளிவந்த படம் 'வாரணம் ஆயிரம்'. ஒரு அற்புதமான காதல் திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது இந்தப் படம். தெலுங்கில் 'சூர்யா S/o கிருஷ்ணன்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அங்கும் படம் வெற்றி பெற்றது.
தற்போது தெலுங்கு பதிப்பை அடுத்த வாரம் ஜுலை 21ம் தேதி ரி-ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அது குறித்து படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ரம்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “இந்தப் படத்தில் பணிபுரிந்தது விருப்பமான ஒன்று. எனது அபிமானத் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. அப்படத்தில் நடித்த போது எனக்கு 22 அல்லது 23 வயதுதான் இருக்கும். அதற்கு முன்பு உணர்ச்சிகரமான நடிப்பை நான் வெளிப்படுத்தியதில்லை. பிரியா கதாபாத்திரம் அன்புக்கும், பொறுமைக்கும் உருவகமாக அமைந்தது. அக்கதாபாத்திரத்தில் என்னை நகர்த்தவும் தூய்மையான காதலை வெளிப்படுத்தவும் தூண்டியது. ஜுலை 21ல் 'சூர்யா S/o கிருஷ்ணன்'...மேஜிக் மீண்டும் நிகழட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் அன்பான காதலியான சமீராவைப் பறி கொடுத்த பின் வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டு, போதைக்கு அடிமையாவார் சூர்யா. அவரை தன் காதல் மூலமும், அன்பு மூலமும் நல்வழிப்படுத்தி மீட்டுக் கொண்டு வரும் பிரியா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரம்யா.