பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இருவரும் லியோ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் மேனன், மலையாள நடிகர்கள் பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் துவங்கியது. கிட்டத்தட்ட படத்தின் பாதி படப்பிடிப்பை அங்கேயே நடத்தினார் லோகேஷ் கனகராஜ். அதைத்தொடர்ந்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் மாறி மாறி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடிகர் விஜய் இந்த படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்தார்.
இந்த நிலையில் நேற்றுடன் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆறு மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், தங்களது முழு மனதையும் இந்த படத்தில் செலுத்தி உழைத்த மொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 19ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.