கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் இன்று (ஜூலை 14) வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல சிவகார்த்திகேயனின் தங்கையாக மோனிஷா பிளஸ்சி என்பவர் நடித்துள்ளார். இவர் குக் வித் கோமாளி சீசன் மூலம் பிரபலமானவர். இதேபோன்று இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் மாவீரன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது இவர்கள் இருவரை பற்றியும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை குறிப்பிட்டார்.
“இந்த படத்தில் எனது தங்கையாக நடித்துள்ள மோனிஷா சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் சமயத்தில் தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அழைப்பு வந்தது. அப்போது என்னிடம் இதுபற்றி கூறினார். நல்ல வேலையாக ஒரே ஒரு நாள் மட்டும் தான் எங்களது படப்பிடிப்பும் குக் வித் கோமாளி படபிடிப்பும் ஒரே சமயத்தில் நடந்தது. அதைக்கூட மோனிஷா அழகாக சமாளித்து விட்டார். டான் திரைப்படத்திலும் சிவாங்கி நடித்தபோது இதேபோலத்தான் ஒரு பிரச்சனை வந்தது. அந்த படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்பதால் அவருக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விதமாக கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்து நடிக்க வைத்தோம்” என்று கூறினார்.