சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர், நிறைய காதலிப்பார் திடீரென எல்லாவற்றையும் ரத்து செய்வார். முதல் நாள் காதலனுடன் படு நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவார். மறுநாள் காதலன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளிப்பார்.
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாடகர் மிகா சிங் தனது பிறந்த நாளை பார்ட்டி வைத்து கொண்டாடினார். இந்த விழாவில் ராக்கி சாவந்த் கலந்து கொண்டார். பார்ட்டி உச்சத்தில் இருக்கும் போது பாடகர் மிகா சிங், ராக்கி சாவந்தை இழுத்து பிடித்து ஒரு உம்மா கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ராக்கி சாவந்த் போலீசில் புகார் செய்தார். புகாரை பதிவு செய்து போலீசார் மிகா சிங் மீது வழக்கு தொடர்ந்தனர். 7 ஆண்டுகளாக மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
பாடகர் மிகா சிங்கும், நடிகை ராக்கி சாவந்தும் நாங்கள் முத்த பிரச்சினையை எங்களுக்குள் பேசி முடித்து சமாதானமாகி விட்டோம். அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.