பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியார், கடந்த இரண்டு வருடங்கலாக தமிழ் திரை உலகில் நுழைந்து அசுரன், துணிவு ஆகிய படங்களில் நடித்து, இங்கேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது அவருடன் சேர்ந்து பைக்கில் வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்தார். அப்போதே அவருக்கு ரேஸ் பைக் ஓட்ட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அதன்பிறகு டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து அதற்கான உரிமம் பெற்று, பின்னர் சிறிய ஸ்கூட்டி போன்ற அளவிலான வண்டிகளை ஓட்டி பழகினார் மஞ்சு வாரியர்.
தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் புதிய பிஎம்டபிள்யூ பைக் ஒன்றையும் தனக்கென சொந்தமாக வாங்கினார் மஞ்சு வாரியர். அதன்பின் தான் நடித்து வந்த படங்களின் இரவு நேர படப்பிடிப்பின்போது இந்த பி எம் டபிள்யூ பைக்கை ஓட்டி பழகினார் என்கிற செய்திகளும் வெளியாகின. இந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு நன்றாகவே இந்த பைக்கை ஓட்டி பழகிவிட்ட மஞ்சு வாரியர் முதன்முறையாக இந்த பைக்கை எடுத்துக் கொண்டு பயணம் செய்த புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு நடிகை திவ்யா பிரமிப்புடன் நாயர் கூறும்போது, “இதை பார்க்கும்போது என்னையெல்லாம் கொண்டு போய் கிணற்றில் தூக்கி போட வேண்டும் போல தோன்றுகிறது” என்று மஞ்சுவாரியரை பாராட்டி உள்ளதுடன் தனக்கு இது போன்று பைக் ஓட்ட வராது என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.




