''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இயக்குனர் கவுதம் மேனன் சமீபகாலமாக ஒரு குணசித்திர நடிகராகவும் மாறி தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ், கடந்த வருடம் தெலுங்கில் வெளியான சீதாராமம், இந்த வருடம் தமிழில் வெளியான விடுதலை என ஒவ்வொரு மொழியிலும் முத்திரை பதிக்கும் நடிப்பை வழங்கி வருகிறார். அந்த வகையில் அவருக்கு தமிழில் மட்டுமல்ல மலையாளத்தில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆனால் சமீப காலமாக அவற்றை தவிர்த்து விட்டு ஏற்கனவே விக்ரமை வைத்து தான் இயக்கி வந்த நீண்ட நாட்களாக ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன்.
இந்த நிலையில் தான் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் பசூக்கா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுதம் மேனன். இதுகுறித்து அவர் கூறும்போது, துருவ நட்சத்திரம் பட வேலைகளையும் பிசியாக இருந்ததால், அதை முடித்துவிட்டு மற்ற படங்களில் ஒப்புக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால் மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் அதை மிஸ் பண்ண விரும்பாமல் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து அவருடன் நடித்தேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டதால் எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனால் மம்முட்டி தான் லைவ் சவுண்டில் எப்படி நடிக்க வேண்டும் என எனக்கு பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அந்த பத்து நாட்களும் மிகப்பெரிய கற்றல் அனுபவமாக எனக்கு இருந்தது” என்று கூறியுள்ளார்.